Tuesday, 31 January 2012

நொறுக்குத்தீனிகள்



நொறுக்குத்தீனிகள் 
சின்னஞ்சிறிய ஒரு தீப்பொறியால் ஒரு காட்டை, நகரத்தை அழித்தொழிக்க முடியும். அவ்வாறு நாவை சப்புக்கெட்டியவாறு வாயில் திணித்துக் கொள்ளும் இடையாகாரம் (டிஃபன்) சிறியதொரு தீப்பிளம்பு போன்று பெரும் கேட்டையும், பாரிய அழிவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்த முடிகின்றது என்பதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நோய்நொடி பிணியகன்ற வாழ்வைப் பற்றிச் சிந்திப்போமாயின் அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் உணவுகள் பற்றியும், இடைக்கிடை அவ்வப்போது உள்ளே தள்ளும் இடையாகாரம் பற்றியும் மிகக் கூடிய கவனத்துடன் இருக்க வேண்டும்.

அன்றாட பிரதான உணவு பற்றிச் சிந்தித்தாலும் நம்மில் அநேகம் பேர் அவ்வப்போது கிடைத்ததை உள்ளே தள்ளும் இடையாகாரம் பற்றிச் சிந்திப்பது மிகக் குறைவே. வேளை மற்றும் சந்தர்ப்பம் பாராமல் அதிகமாக உணவாகக் கிடைப்பது இந்த இடையாகாரமி எனலாம். மேலும் தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பம் உணர்ந்தோ உணராமலோ மனிதனை இவ்வாறான இடையாரங்கள் பக்கம் மிகத் துரிதமாகமே கவர்ந்து சென்று விடுகின்றது என்பதனை அவ்வாகாரங்களை உண்ட பின்னே உணர முடிகின்றது.

பொதுவாக ஆண், பெண், சிறுவர் என்ற பேதமின்றி உகந்தது, உகந்ததல்ல என்ற பகுப்பாய்வின்றி ஒரு சிலவற்றிற்குக் கேடு விளைவிக்கும் என்ற தெரிவின்றி சகலரும் ஐஸ்கிaம் மற்றும் சொக்கலேட்கள் போன்ற அதிக கலோரிச் சத்துள்ள உணவுகள் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.

நாம் அதிகமாகக் கரும மாற்றும் அல்லது நேரத்தைச் செலவிடும் இடங்களில் ஐஸ்கிரீம், சொக்லெட் போன்ற மிட்டாய்கள், கெரமல் மற்றும் ஜெலி போன்ற உணவுகள் பூந்தி, மஸ்கட் மற்றும் அதிமதுரமான நாவில் நீர் ஊரும் உணவுகளை பார்வைக்குப் புலப்படுமாறு வைப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

மிகவும் குறைந்தளவு சக்கரையையுடைய அல்லது சுகர் ஃபிரீ பபுல் கம் போன்றதொன்றை மென்று நுரை ஊதித் தள்ளும் போது வேலை செய்யும் போது ஏற்படும் தொய்வையும் சோம்பலையும் கூட ஊதி வெளித்தள்ளலாம். மூளையைப் பயன்படுத்தி மிக நுணுக்கமாக வேலை செய்வதை விட்டும் செல்லும்போது அதிகமான மனச்சோர்வும் உடற்சோர்வும், ஏற்பட வாய்ப்பாயிருக்கின்றது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் துணி வைத்தல், வீட்டின் அலுமாரி, கட்டில் பக்கம் மூளைகளில் தூசி தட்டித் துடைத்தல், புத்தகங்களை அல்லது அலுமாரியில் துணிகளை மீண்டும் ஒழுங்காக அடுக்குதல், பூஞ்சாடிகளை அங்கிருந்து நகர்த்தி வைத்தல் மற்றும் அடிக்கடி பாவனைக்கு உதவாத பொருட்களை ஒழுங்கு படுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் போது உடலில் வியர்வை துளிர் விடுவதோடு தாகமும் உருவாக, குளிர்ந்த நீரை அதிகமாகப் பருகக் கூடிய வாய்ப்பும் ஏற்படுகின்றது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏதாவது உண்ண வேண்டுமாயின் பழங்களை கரட் கிழங்கை அல்லது எலுமிச்சம் சாறை உடகொள்ளலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிக மாச்சத்து, புரதச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும்போது அது உடலில் எடையை அதிகரிக்க வாய்ப்பேற்படுகின்றது.

சிலர் தமது ஓய்வு நேரங்களில் அல்லது வீட்டிலே நேரத்தைக் கழிப்பதற்கு அல்லது மழை காலங்களிலே வீட்டிலே முடங்கிக் கிடக்கும் போது ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் வீணாகச் செலவு செய்து கொழுப்பு, புரோட்டின் நிறைந்த உணவுகளையோ சக்கரை நிறைந்த உணவுகளையோ சமைத்தோ அல்லது வாங்கியோ உண்ணுகின்றனர்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் முடிந்தளவுக்கு ஏதாவதொரு வேலையில் கவனத்தைச் செலுத்துங்கள். அறிவு பெறுவதில், வாசிப்பதில் அக்கறை கொண்டவராயின் ஏதாவதொன்றை எடுத்து வாசிக்கலாம். அல்லது உள, உடல் அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுகளில் வீட்டிலுள்ள மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களை சேர்த்துக் கொண்டு ஈடுபடலாம். ஏதாவது சாப்பிட்டேயாக வேண்டும் என இருந்தால் உடலுக்குக் கேடு விளைவிக்காத ஏதாவது கஞ்சி, சிறு உணவுகளைச் சமைத்துச் சாப்பிடலாம்.

நம்மில் அநேகர் ஒரு பெரும் தவறைச் செய்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டே விதம் விதமான நொறுக்குத் தீனிகளை, உணவுகளை விழுங்கித் தள்ளுவதே அப்பாரிய பிழையாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீதுள்ள ஆர்வம் எவ்வளவுக்கெனின் அவர்கள் விழுங்கிய உணவின் தெரிய வருவதே பாத்திரம் காலியான பின்பாகும். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் முடிவுறாததால் மேலும் ஒரு பாத்திரம் தீனி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் கூடவே எழுகின்றது.

நீங்கள் தொலைக்காட்சியின் பக்கம் செல்லும் போது பெரும் பாத்திரத்தில் இடையாகாரத்தை நிரப்பிக் கொண்டெனின் அடுத்த முறை குறைவாக எடுத்துக் கொண்டு ஒரு பெரும் தம்ளரில் குளிர் நீரையும் எடுத்துக் கொண்டு பருகுவீராயின் நொறுக்குத் தீனியின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

எமக்கு வாரத்தின் எல்லா நாட்களும் நல்ல, மனச் சோர்வற்ற நாட்களாக இருப்பதில்லை. வேலைத் தளங்ளிலோ அல்லது வீட்டிலோ மனச்சோர்வு அல்லது உயர் மன அழுத்தம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அநேகமாக இருக்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் விளையாட்டிலோ அல்லது வாசிப்பிலோ ஈடுபட முடியாததால் அதிக சக்கரைத் தன்மையற்ற இனிப்புகளோ கொழுப்பற்ற அதிக புரோட்டீன் அற்ற உணவுகளையோ சற்று புளிப்புள்ள பழங்களையோ தெரிவு செய்து கொள்ளலாம்.

அதிக சக்கரையற்ற சொக்கலேட்டைக் கூட தெரிவு செய்து கொள்ளலாம். இதனால் உள்ளத்திற்கு சற்று நிம்மதியும் பெறலாம். ஏனெனில் மூளையால் ஸொரொட்டனின், ஃபெனிலெத்திலெனின் மற்றும் தியாப்பிரோமின் போன்ற சுரப்புகளை சுரக்க ஊக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வகையான சுரப்புகள் நிம்மதியான மனவோட்டத்தை மனப்பான்மையை நிலைமையை உருவாக்க வழிவகுக்கின்றது. ஆனால் சாக்கலேட்டில் அதிகளவு கலோரி இருப்பதால் அது உடலுக்கு அவ்வளவு உகந்ததல்ல என்பதனையும் மறந்து விடலாகாது.

அநேகமாக சக்கரை குறைந்த மற்றும் குறைந்த அளவிலான கலோயுடைய சொக்லேட்டுகள், சுவிங்கம் போன்ற மன அழுத்தத்திற்குச் சிறந்ததோடு நீண்ட நேரம் தனிமையில் இருப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான மன அழுத்தம் நோயாக மாறாது கவனித்துக் கொள்வது அவசியம் என்பதோடு, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியில்லையாயின் வைத்திய ஆலோசனை பெறுதல் சாலச் சிறந்ததாகும். தனிமையில் இருப்பது அதிகரிக்குமளவிற்கு மன அழுத்தமும் அதிகரிக்கலாம்.

மதுப் பிரியர்களும் பைட் என்ற பெயரில் மதுவோடு காரம், எண்ணெய் மற்றும் புரதங்கள் கூடிய இடையாகாரங்களைப் பாவிக்கின்றனர். இடையாகாரங்களே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போது மது மற்றும் போதைப் பொருட்கள் எவ்வாறு உடலுக்கு கேடுவிளைவிக்காமலிருக்கும்?

No comments:

Post a Comment