Sunday, 19 February 2012

ஹாட் ஏர் - Baloon


இந்தியாவில் ஹாட் ஏர் பலூனை பிரபலப்படுத்தும் பிரெஞ்சு நிறுவனம்

வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஹாட் ஏர் பலூன் சுற்றுலாவை இந்தியாவில் பிரபலப்படுத்த களம் இறங்கியுள்ளது பிரான்ஸைச் சேர்ந்த பிளானட் பலூன் என்ற நிறுவனம்.

சமீபத்தில் இந்த நிறுவனம் தனது நடவடிக்கைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே பிளானட் பலூன் நிறுவனத்தின் ஹாட் ஏர் பலூன் சுற்றுலா நடவடிக்கைகள் மடகாஸ்கர், அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் பிரபலமானவை.

இந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கும் பிளானட் பலூன், இந்திய மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவையை தருவதோடு, திரில்லிங்கான அனுபவத்தையும் அளிக்க உறுதி பூண்டுள்ளது.

சுற்றுலா தவிர விளம்பரம் மற்றும் பயிற்சி ஆகிய இரு பிரிவுகளிலும் பிளானட் பலூன் இந்தியாவில் கவனம் செலுத்தவுள்ளது. தங்களுடன் இணைந்து செயல்பட பார்ட்னர்களையும் இந்த நிறுவனம் வரவேற்கிறது.

இந்திய நிறுவனமான டைகர் பலூன் சஃபாரி-யுடன் இணைந்து பிளானட் பலூன் தனது இந்திய பயணத்தைத் தொடங்கியுள்ளது. தற்போது 2 ஹாட் ஏர் பலூன்களை இயக்க இந்த நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 

தங்களது செயல்பாடுகள் குறித்து டிராவல் ஏஜென்டுகள், ஹோட்டல்கள், சுற்றுலா ஆபரேட்டர்கள் ஆகியோருடன் வர்த்தக உடன்பாட்டை மேற்கொண்டு இந்த விளையாட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் பிளானட் பலூன் இறங்கியுள்ளது.

இவர்கள் வைத்துள்ள ஹாட் ஏர் பலூனில் ஒரே சமயத்தில் 30 பேர் பயணம் செய்ய முடியும். உயரத்திலிருந்து (குறைந்தது 150 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை) சுற்றுலாத் தலங்களைப் பார்த்து ரசிக்க முடியும். 

இந்த பலூன் பயணம் உள்ளிட்ட மேலும் விவரங்கள் அறிய: 

www.planeteballoon.com / www.loire-et-montgolfiere.com

No comments:

Post a Comment