Thursday, 16 February 2012

ஜலதோஷம்


ஜலதோஷத்தால் குழந்தைகள் அவதியா?


குழந்தைகளை அடிக்கடி வாட்டி எடுக்கும் பிரச்சனைகளில் ஜலதோஷமும் ஒன்று. எளிய நாட்டு வைத்தியத்தால் இதை குணப்படுத்தலாம். 


குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் எப்படி பிரியமோ, அதேபோல் ஜலதோஷத்திற்கு குழந்தைகள் என்றால் ரொம்பப் பிரியம் என்றே சொல்லலாம். 


இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.


வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், அதை மஞ்சள் தூளுடன் கலந்து குழந்தைக்கு கொடுக்கம். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்தால், ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


இதேபோல் மற்றொரு குறிப்பும் உள்ளது. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் ஜலதோஷம் நீங்கிவிடும்.


இந்த குறிப்பு பெரியவர்களுக்கும் பொருந்தக்கூடியன.

No comments:

Post a Comment