Monday, 20 February 2012

பெண் தியாகிகள்




நம் நாட்டின் பண்பாட்டின்படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று கூறலாம். திருமணத்திற்கு பின் கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய், தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்துதான் வருகிறார்கள். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது.


“பெண்வயிற்றில் உருவாகிப் பின்னுமந்த
பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்து மேலும்
பெண் துணையால் வாழ்கின்ற பெருமை கண்டு
பெண்மையிடம் பெருமதிப்பு அறிஞர் கொள்வார்
உலகில் சரிபாதி பெண்ணினம் என்றால் மறுபாதி
ஆண் இனம் அன்றோ! அந்த சரிபாதி
ஆண் இனமும் பெண்களால் அளிக்கப்பெற்ற
அன்பளிப்பே ஆகும் அன்றே!”
 – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


கற்பு, அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, தியாகம், தூய்மை, ஒற்றுமை ஆகிய உயர்ந்த குணங்கள் யாவும் அடங்கியவர்கள்தான் பெண்கள்.


குழந்தையின் பெருமையே குடும்பத்தின் பெருமை. குழந்தையை தருவது தாய். ஆகையால் ஒரு குடும்பத்தின் சீரும், பெருமையும், வளமையும், சிறப்பும், நலமும், திருவும் தாய்மாரின் வழியாலே வருவன ஆகும்.
எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் - அற்புதமே! வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனைபேர்.


இவ்வளவு சிறப்புகள் பெருமைகள் கொண்ட பெண்ணினத்திடம் எந்த ஒரு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கொள்கிறார்களோ அந்த குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். 


அன்பு என்பது அதையே கொடுத்துப் பெற வேண்டிய பொருள்.அன்பைக் கொடுத்தால் தான் அன்பைப் பெற முடியும்.

No comments:

Post a Comment