Monday, 13 February 2012


நோபல் பரிசையும் பாதித்த பொருளாதார நெருக்கடி!



Nobel prize
ஸ்டாக்ஹோம்: அரிய சாதனைகள் செய்தவர்கள், உலக அமைதி்க்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் விருது நோபல் பரிசு.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்ப்ரெட் நோபல் என்ற தொழிலதிபர் 1901ம் ஆண்டு இந்த விருதினை உருவாக்கினார். இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட்டாக செய்து ஆண்டுதோறும் பரிசை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார்.

பரிசு தரும் துறைகள் ஒவ்வொன்றின் பெயரிலும் தனி கணக்கு துவங்கி இந்தத் தொகை டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம்தான் பரிசுத் தொகையின் மதிப்பு.

ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ரூ.7 கோடி பரிசு தொகை (10 மில்லியன் க்ரோனார்) வழங்கப்பட்டு வருகிறது. 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுத் தொகையை மட்டும் ஸ்வீடன் மத்திய வங்கி ஏற்றுக் கொண்டது.

ஆனால் பொருளாதார மாற்றங்கள் காரணமாக நோபல் பரிசு கமிட்டிக்கு வரவேண்டிய வருமானம் குறைந்துவிட்டது.

எனவே இனிவரும் காலங்களில் நோபல் பரிசுத் தொகையைக் குறைத்து வழங்க திட்டமிட்டு உள்ளதாக இந்த கமிட்டி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது. நோபல் பரிசு கமிட்டியின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஷால்மர் இதுபற்றிக் கூறுகையில், "பொருளாதார மந்தம் காரணமாக வங்கிகளின் வைப்புகளுக்கு தரப்படும் வட்டி கணிசமாகக் குறைந்துவிட்டது. வெளி ஆதாரங்களின் மூலமும் பெரிய அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் பரிசு தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தவிர்க்க நாங்கள் விரும்பினாலும், நிஜம் இதுதான். எனவே நிலைமை சீராகும் வரை பரிசுத் தொகையை குறைத்து வழங்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

31 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனார் (அந்த நாட்டு கரன்ஸி) தொகையை 100 ஆண்டுகளுக்கு டெபாஸிட் செய்திருந்தார் ஆல்ப்ரெட். 1901-ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த முதலீடு, இன்று 2.8 பில்லியன் குரோனார் அளவு வளர்ந்துள்ளது.

No comments:

Post a Comment