Thursday, 9 February 2012

மன உளைச்சல் தரும் தலை


 வழுக்கை: எளிய சிகிச்சைமுறை

அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது என்ற வருத்தத்திலேயே எண்ணற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு. மேலும் இரும்புச் சத்து குறைபாடினால் ஏற்படும் ரத்தசோகை, தைராய்டு பிரச்சினை, பூஞ்சைத் தாக்குதல், மனஅழுத்தம், மருந்துப்பொருட்கள் போன்றவை தலையில் வழுக்கை விழ காரணங்களாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம். எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தேங்காய் எண்ணெய், வெந்தயம்

உடல் உஷ்ணத்தினால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்க தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உபயோகிக்கலாம். இதனால் முடி உதிர்வது தவிர்க்கப்படும்.

புழுவெட்டு சரியாகும்

வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும். அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்க்கும் மருந்துகள்

பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும். இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

மன அழுத்தம் தவிர்க்கவும்

மன அழுத்தமானது முடி உதிர காரணமாக கருதப்படுகிறது. எனவே அமைதியான சூழலில் முடி அமர்ந்து தியானம் மேற்கொள்வது மன அழுத்தம் போக்கும். இதனால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும். முடி கொட்டத் தொடங்கினாலே ரசாயன பொருட்களை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இயற்கை மூலிகைப் பொருட்களையும், உடலுக்கு குளுமை தரும் பொருட்களையும் பயன்படுத்தவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment