Sunday, 19 February 2012

பெண்ணின் சுதந்திரம்


 இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள்பெண்கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது.ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப்பெண்தானேஅவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும்அது ஆணோபெண்ணோ – அந்த குழந்தைகளும் இயல்பாகஇருக்காது.


பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவைஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும்முட்டாள்தனமானவையே.அது வெறும் காப்பியடித்தல்வேஷமிட்டுக் கொள்ளல்விடுதலை அல்ல.

உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும்ஆணின் நகலாக அல்லஆனால்இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர்ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும்சிகரெட் பிடிக்க வேண்டும்ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள்பெண் இரண்டாம்தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள்.
பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றும்கிடைக்காதுபெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிக அவசியம்.அடிமைப் படுத்தப் பட்ட ஒரு பெண் வெகு நிச்சயம்ஆணையும் அடிமையாக்க முயலுவாள்.அவள் வழி நுட்பமானதுமிக மிக நுட்பமான வழிகளில் அவள் ஆணை அடிமைப் படுத்தமுயலுவாள்.

அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள்அவள் சண்டை மறைமுகமானதுஅவள் அழுவாள்கதறுவாள்அவள் உன்னைஅடிக்க மாட்டாள்தன்னைத் தானே அடித்துக் கொள்வாள்மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம்அழுது கதறுவதன்மூலம்மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான்பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும்அப்போதுதான்அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.
கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள்தேவதைகள் என்று நம்ப வைத்தான்ஆண் தூய்மையற்றவன்.பையன்கள் பொறுக்கிகள்ஆனால் பெண்அவள் தெய்வீகமானவள்ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான்.பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.

ஆண் அவளை வணங்கினான்அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம்அப்படி இயல்பாக பீடத்தின் மேல்அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள்அதனாலேயே ஆண்கள் செய்தவற்றையெல்லாம் அவளால்செய்ய முடிய வில்லை.

அவளது ஈகோவைஆணவத்தை மீறி அவளால் எதுவும் செய்ய முடிய வில்லைஅந்த உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும்திருப்தியளித்ததுஅவள் ஒரு தாய்அவள் ஒரு தெய்வம்ஆணை விட அதிக தெய்வத்தன்மை உடையவள்.

அதனாலேயே ஆண் காலம் காலமாய் அவனது வழியிலேயே இருந்து வருகிறான்பெண் மட்டும் எப்போதும் புனிதத்தன்மையுடையவளாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப் பட்டு வருகிறாள்பெண் சராசரியாக இருக்க என்றுமேஅனுமதிக்கப் பட்டதில்லைசராசரி பெண்கள் மோசமானவர்கள் என்ற கற்பிதத்தை இந்த சமூகத்தில் ஆண் உருவாக்கிவைத்திருக்கிறான்.

நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைகளில் ஒன்று இதுநீ யாரையாவது அடிமைப் படுத்தினால் நீயும் கடைசியில்,முடிவானஅடிமைதான் ஆவாய்சுதந்திரமாக இருக்க முடியாதுநீ சுதந்திரமாக இருக்க விரும்பினால்மற்றவர்களுக்கும் விடுதலையைக்கொடு.

மார்க்ஸ் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்த்தார்ஏழைகள் பணக்காரர்கள் என்றுநான் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்க்கிறேன்ஆண்கள்பெண்கள்.
ஆண் பல நூற்றாண்டுகளாய் எஜமானனாய் இருக்கிறான்பெண் அடிமையாய் இருக்கிறாள்அவளை ஏலம் போட்டார்கள்விற்றார்கள்.உயிருடன் எரித்தார்கள்எந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது அவளை கற்பழிக்க முனைந்தார்கள்.

பெண்களுக்கு போர்களில் ஈடுபாடு கிடையாதுபெண்களுக்கு அணுகுண்டு ஆயுதங்களில் ஈடுபாடு கிடையாதுஅவர்களுக்குகம்யூனிசத்திலும்முதலாளித்துவத்திலும் ஈடுபாடு கிடையாது.

இந்த எல்லா இசமும் தலையிலிருந்து வந்தவைபெண்கள் வாழ்வை அனுபவிப்பதில்வாழ்வின் சின்ன சின்ன அழகானவிஷயங்களை ரசிப்பதில்தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமாபெண்களை நேசியுங்கள்.



No comments:

Post a Comment