Wednesday, 8 February 2012

ஆன்மீக அனுபவம்


இந்தப் பெரிய ஆன்மீக அனுபவத்தைச் சமாதி நிலையில் காண்பது ஆன்மீக அனுபவமான காட்சி. அதையே ஒரு சிறு வேலை மூலமாகப் பெறலாம். நடைமுறையில் அவ்வேலை நமக்குக் கட்டுப்பட வேண்டுமானால், பூரணயோகத் திருஷ்டி தேவை.

1. ஆசை திருஷ்டியால் சரணாகதியைப் பூர்த்தி செய்யும்.
திருஷ்டி தரும் சமாதி; .
2. பூரண யோகத் திருஷ்டி வாழ்வை யோகமாக்கும்.
3. புலன்கள் அழிந்த பின்னரே தியானம், நிஷ்டை, அதன் சிகரமான சமாதி நிலை.

தியானத்தின் நிலைகள் பல. விழிப்பான நிலை ‘ஜாக்கிரதா’ எனப்படுவது. புலன் அழிந்து உள்ளே மனம் விழிப்படைந்து நிகழ்ச்சிகள் காட்சிகளாகத் தெரியும் ‘சொப்பன நிலை’. அடுத்தது மனதைக் கடந்த நிலை. கடைசி கட்டமும், நான்காம் கட்டமுமான ‘துரிய நிலை’. இவற்றிற்கு அடிப்படைப் புலன்கள் செயலிழப்பது. ஆன்மீக அனுபவம் உயர உயர அதைப் பெறும் ‘சமாதி’ நிலையும் உயர வேண்டும்.

சமாதி நிலையில் பெறுவது சமாதியிருக்கும்வரை தெரியும். சமாதியை விட்டு வெளிவந்து தியானம் கலைந்த பின் சமாதியில் கண்டது தெரியாது. ஏதோ உயர்ந்த ஒன்றைத் தொட்டது போன்ற உணர்வு விவரமில்லாமலிருக்கும். இதுவரை செய்த யோகங்களின் நிலை இது.
     
பூரண யோகத்தில் ‘சமாதி’ நிலை என்பதில்லை. சமாதியை unconscious stage தன்னையறியாத நிலை என்பதால் அது பூரணமாக இருக்க முடியாது என்பதால், பூரண யோகம் சமாதியை நாடவில்லை. மற்றும் பூரணயோக முறைகள் எதுவும் சாதகனை சமாதிக்கு அழைத்துச் செல்ல முடியாது.
யோகிகள் சமாதி நிலையில் புலன்களை அழித்து ஆன்ம விழிப்பால் பெறும் தெளிவை, புலன்களைத் தூய்மைப்படுத்தி, அழிக்காமல், விழிப்போடு வேலை செய்யும்பொழுது பெற்றால் அதையே நாம் சமாதி எனக் கருதலாம் என்கிறார்.

சமாதி நிலையில் ஆன்மா மட்டுமே விழித்துள்ளது. புலன்களும், மனமும், உணர்வும், உடலும் தங்களை அறிய முடியாத அளவுக்கு மறந்திருக்கின்றார்கள். அதனால்தான் நிஷ்டையில் உள்ள ரிஷி மேல் செல்லும் பற்று எழுந்தாலும் அவர் அதை அறிவதில்லை. பூரண யோகத்தில் எந்தக் கரணத்தையும் அழிப்பதில்லை. மாறாக எல்லாக் கரணங்களையும் துலக்கி, தூய்மைப்படுத்துவது முறை. புலன்களும், கரணங்கள் தூய்மைப்பட்டதால் அங்கு இருளில்லை. இருள் நிறைந்த கரணம் இடையூறாக இருப்பதால் தபஸ்வி அதை அழிக்கின்றார். இருளில்லாத கரணம் ஒளியால் நிரப்பப்பட்ட பொழுது அதை அழிக்க வேண்டிய அவசியமில்லை. அது இடையூறாக இருக்காது. கரணங்களும் அப்படியே அழிக்கப்படுவதில்லை. துலக்கப்படுகின்றன.

சமாதியில் ஆன்மா மட்டும் பெறும் ஞானத்தை பூரணயோகம் ஆன்மாவுக்கும், ஏனைய அனைத்துக் கரணங்களுக்கும் அளிக்கின்றது. அதற்கு, செயல் - கர்மம் - தேவை. செய்யும் செயல் சமர்ப்பணமானால், சமர்ப்பணம் பூர்த்தியானால், பூர்த்தியான நிலையில் எந்த வேலையும், சிறு வேலையானாலும், சமாதி யோகிக்குப் பெற்றுத் தந்த அகக்காட்சியை, திருஷ்டியை vision - பெற்றுத் தரவல்லது. அந்நிலையை எய்தினால் அது பூரணயோக திருஷ்டியாகும். அதைத் திரிகாலத் திருஷ்டி என்பர்.
     
திரிகாலத் திருஷ்டி பெற காலத்தைக் கடக்க வேண்டும். Synthesis of Yoga சின்த்தஸிஸ் ஆப் யோகா எனும் யோக நூல் கடைசி அத்தியாயத்தை பகவான் திரிகால திருஷ்டியை விவரிக்கப் பயன்படுத்துகிறார்.

மனித நிலையை - மனத்தை - மூன்று நிலைகளாகப் பிரிக்கின்றார். முதல் நிலை இன்று நாம் உள்ள நிலை. இது அறியாமை மனம் (mind of ignorance) என்கிறார்.உலகத்து ஞானம் முழுவதும் உள்ளேயுள்ளது என அறிந்தபின், பெருமுயற்சி செய்து புறவழிச் செல்லும் பார்வையை, அகவழிச் செலுத்தி, உள்ளேயுள்ள ஞானத்தை எட்டினால் வெளியில் தேடி கிடைத்த அனைத்தும் உள்ளிருப்பதையும், தேடிக் கிடைக்காதவையும் உள்ளிருப்பதையும் காணலாம். அதை (mind of self forgetful knowledge) தன்னை மறந்த மனம் என்கிறர். இதை எய்தியபின் திருஷ்டி திரிகாலத் திருஷ்டியாகிறது.

ஞானம் நிறைந்த மனத்தை எட்டி, திரிகாலத் திருஷ்டி பெற ஆரம்பித்தால், சமாதி நிலை விலகிப் போகும். சமாதியில் பெறும் ஞானம் நாம் செய்யும் வேலையில் எழும். அதுவே பூரண யோக திருஷ்டி எனப்படுவதாகும்.

No comments:

Post a Comment