Friday, 2 March 2012

இதோ என்தன் தெய்வம்

 
மனிதன் தன் வாழ்க்கைக்குத் தேவையான பொருளையும் தன் மனதில் எழும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உறவுகளையும் தேடுகிறான். இத்தேடலின் விளைவாக ஏற்படும் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் எழுகையில் அவற்றின் தாக்கத்திலிருந்து மீள வழி தேடுகையில் உதித்ததுவே தெய்வமெனும் தத்துவம். தன்னிடம் இல்லாத ஒரு சக்தியையும் ஆனந்தத்தையும் அவன் அத்தெய்வத்திடம் காண்கிறான். இதன் விளைவாக உருவானவையே மதங்களும் அவற்றினை போதிக்கும் மார்க்கங்களான் புராணங்களும் ஆகும். ஆனால் அத்தகைய தெய்வம் எங்கே உள்ளது என்று பொருளைப் பெரிதென மதித்து உயிர்களை மதிக்கத் தவறும் மாந்தர்கள் உணர்வதில்லை. தெய்வம் இல்லாத இடமேயில்லை.

அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருட்களும், அனைத்து ஒலிகளும் அனைத்துக் காட்சிகளும் அண்டசராசரங்களும் இறை வடிவமேயென ஞானியர் உணர்ந்து தெளிந்து நமக்கு எடுத்துரைத்த போதிலும் அறியாமையினால் நாம் அதை முழுவதும் உணர்வதில்லை. உலக இன்ப துன்பங்களிலேயே பெரும்பாலும் கிடந்து உழல்கிறோம்.

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்லென்று இரணியன்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:'தூணி லுள்ளான்
நாரா யணன் துரும்பிலுள்ளான்' என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ?

என்று மஹாகவி பாரதியார் பிரஹலாதன் கதையிலிருந்து வெளிப்படும் தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

இதோ இன்கே ஒரு மனிதன் தன்னிடம் அன்பு செலுத்தும் ஒரு சிறு குழந்தையை தெய்வமாகக் கண்டு பாடுகிறான்.



திரைப்படம்: பாபு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்ஓரே ஒரு புன்னகையில் கண்டேனேஇதோ என்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனேபாசமுள்ள பார்வையிலே கட்வுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன்கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் குளிர்மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் குளிர்மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்விறான் அவன்கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவைஅனைத்திலுமே இருப்பது தான் தெய்வம் இவைஅனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வைகண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழைஅவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்விறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே



No comments:

Post a Comment