Sunday, 22 April 2012

தனி ஈழம் வாக்கெடுப்பு: கருணாநிதி கோரிக்கை


தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு
கருணாநிதி கோரிக்கை
சென்னை: இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.., தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இம்முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், .நா., சபையின் தலையீட்டின் கீழ் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்திய அரசு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள அவர், .நா., இதை செயல்படுத்துவதற்கு இந்தியா ஆதரவும், அழுத்தமும் தரவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment