Total Pageviews

Showing posts with label Sidtha. Show all posts
Showing posts with label Sidtha. Show all posts

Tuesday, 24 January 2012

மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட


                                 மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட 
                                 மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட  [Image]
    காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர்  .
    கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் 
    ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்.
    இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருருக்கவேண்டும், வலியில் எங்கே தூங்குவது சிரமமாக இருக்கும் ...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவரும்.
    கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் ,
    சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
    நோய்வந்தவருக்கு மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது என தகவல். அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடலாம்.,  கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு `
    இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
    சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக சில :
    துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
    ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
    திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
    மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
    அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
    தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
    இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
    வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம். மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.  
    1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
    2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்,.    
                                கொள்ளு
    கொள்ளு -இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -கொள்ளு -கருப்பு பயிரை -இரவில் ஊறவைத்து காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .

    Wednesday, 11 January 2012

    Top spices

     10 Spices to raise your sex drive

    Some spices can enhance your lustful performance


    India is the land of spices and the second-most populous country in the world. Though the two facts sound disarrayed, they are actually linked! Research proves that our sex life gets affected (and spiced up) by some spices.
    Fenugreek seeds: Saponins which can be found in fenugreek seeds play a role in increasing the production of testosterone, the male hormones, which, in turn, causes the raise in male libido.
    Cardamom: These green wonders increase energy and relieve fatigue, and help you rock your love making process.
    Clove: They heat up the body and maybe that's what increases the hotness quotient on bed!
    Fennel: Saunf, as they are called in Hindi, contain an estrogen-like substance (estirol) that turns out libido. So careful before you grab a handful of it at a restaurant after dinner.
    Ginseng: It helps improve male erectile dysfunction (ED)
    Saffron: There's a reason why old Hindi films had saasumas forcing bahus to add saffron to the milk on the first night. And you thought it was just for a fair child!
    Nutmeg: It's one of the most popular natural aphrodisiacs. Research proves that nutmeg has the same effect on mating behavior as Viagra. Sprinkle some in your kheer for a dirty night!
    Cloves: They boost your energy levels. They also have one of the best aromatherapy scents that help improve your sexual behaviour.
    Garlic: Eating green chilies with garlic is an old (tried and tested) way of enjoying sex for a longer period. Peel off its top layers, crush cloves and then fry in butter, and your partner is ready to be a nutter!
    Ginger: Garlic's 'g' brother helps you tingle the 'G' spot with ease. It increases sex drive and stimulates sexual performance.
    So before you start your performance, hit to the kitchen. Get lusty and spicy!

    Take Ghee

    நெய் 
    பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.


    மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.


    மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.


    மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும்.


    சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.
    பால் பொருட்களிலேயே அதிக சுவையையும், இனிய நறுமணத்தையும் கொண்டது நெய் தான். தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட வெண்ணெய் அல்லது பால் கொழுப்பு உருக்கப்படும் போது நெய்யாகிறது. வெண்ணெய்யைச் சுமார் 100 டிகிரி சி வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கிறது.
    நெய் வெள்ளை நிறத்திலிருந்து, இள மஞ்சள் நிறம் வரை அதிலுள்ள கரோட்டின் அளவைப் பொறுத்தது. நெய்யில் ஏறத்தாழ 8 சதவிகித அளவு தாழ்நிலை செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் நெய் எளிதாக செரிமானம் ஆகிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. இது குறித்தே பண்டைய ஆயுர்வேத ஆசிரியர் பவபிரகாசர்.
    “நெய் ஒரு இனிய இரசாயனம். சுவை மிக்க நெய், ஜீரணத்தைக் கூட்டிக் கண்களை ஒளிபெறச் செய்கிறது. உடலுக்கு வலிவையும் பொலிவையும் தந்து நோயிலிருந்து காக்க வல்லது. நினைவாற்றலையும், வாழ்நாளையும் உயர்த்த வல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.
    நெய்யில் ஏ, டி, இ, கே ஆகிய விட்டமின்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ – யும், இ – யும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளாக இருப்பதனால் ஆக்ஸிஜனேற்றத்தால் நேரும் தீய விளைவுகளை தடுக்க உதவுகின்றன. நெய் மற்றும் மீன் எண்ணெய்யைத் தவிர வேறு எந்த தாவர எண்ணெய்களிலும், கொழுப்புகளிலும், வைட்டமின் ஏ காணப்படுவதில்லை. வைட்டமின் ஏ உடலில் உள்ள எபிதீலியல் திசுக்களை கட்டுக் குலையாமல் பாதுகாக்கிறது. மேலும் இது கண்ணின் கருவிழியைச் சுற்றிலும் அதிக ஈரப்பசையை அளித்து பார்வையிழப்பு நேராமல் பாதுகாக்கிறது. இன்றியமையாத கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் நெய்யில் 4 – 5% வரை காணப்படுகிறது. இது ஒழுங்கான உடல் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.
    நெய் தயாரிப்பின் போது, அதிலுள்ள கேஸீன் புரதம் கழிவுறச் செய்யப்படுகிறது. ஆனால் இந்த கேஸீனால் எவ்வித நன்மையுமில்லை. மிருகங்களில் இப்புரதத்தை உட்செலுத்தி ஆய்வு செய்த போது, அவற்றின் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெய்யில் வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளை எதிர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதால் இவற்றினால் நெய் கெட்டுப் போவதில்லை.
    நெய், 35 டிகிரி சி வெப்பத்திலேயே அதாவது மனிதனின் உடல் வெப்ப நிலையை விட குறைவான வெப்பத்திலேயே உருகிவிடக்கூடியது. மேலும் நெய், மற்ற எண்ணெய்கள், கொழுப்புகளைக் காட்டிலும் உயர்ந்த அளவு அதாவது 96% செரிமான விகிதத்தைப் பெற்றிருக்கிறது.
    ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் நெய் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. செரித்தல் உட்கிரகித்தல் உறுப்புகளில் மருந்தினை சேர்த்தல் என்ற மூன்று முக்கிய பணிகளும் சரிவர அமைந்திருப்பது ஒரு மருந்துக் கலவைக்கு மிக மிக இன்றியமையாதது. நெய்க்கு இம்மூன்றையும் செயல்படுத்தக் கூடிய பண்புள்ளது. ஆயுர்வேதக் கலவைகளில் நெய்யுடன் வேறு சில செயல்திறமிக்க பொருள்  சேர்க்கப்படுவதால் மேற்குறிப்பிட்ட மூன்று பணிகளுமே செம்மையாக நடைபெற உதவுகிறது.
    லிப்பிட் நிறைந்த செல்களை நோக்கி ஈர்க்கப்படக் கூடிய பண்பு நெய்க்கு இருப்பதால் சிகிச்சை தேவைப்படும் உறுப்புக்களில் உள்ள செல்களை எளிதாகச் சென்றடைகின்றது. நெய்யின் பண்பு மருந்துக் கலவையானது செல்லுக்கும் செல் உள்ளிருக்கும் உறுப்புக்களான மைட்டோகான்ட்ரியா மைக்ரோஸோம் மற்றும் நியூக்ளியர் சவ்வுகளிலும் எளிதாக சென்று சேர உதவுகிறது.
    நெய்யில் அதிகம் காணப்படும் வைட்டமின் இ -யும், பீட்டா கரோட்டினும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் ஆக்ஸிஜன் எதிர்ப்பிகளாகச் செயல்படுகின்றன.
    ஆயுர்வேத மருந்துகளை கிரகித்தல் கடத்துதல் மற்றும் உறுப்புகளில் மருந்தை சேர்ப்பித்தல் ஆகிய மூன்றும் இன்றிமையாத பணிகளிலும் உதவி அமைகின்றது. தினசரி ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை உணவுடன் சேர்த்துக் கொண்டால் அது செரிமானத்தை விரைவுபடுத்தி உணவு உட்கிரகிப்பில் துணைபுரியும்.




    KNOW ABOUT GHEE



    Paradoxical information . still worth a read.
     
    Fact: Ghee is composed almost entirely of saturated fat. What you're already shaking your head with disgust?? Just read on and have patience. Remember a good cook must have a lot of patience.

    Fact:
    When cooking, it can be unhealthy to heat polyunsaturated oils such as vegetable oils to high temperatures. Doing so creates peroxides and other free radicals. These substances lead to a variety of health problems and diseases. Hey now even vegetable oils sound scary! Good we're making progress here.

    Fact:
    Ghee has a very high smoke point and doesn't burn easily during cooking. Ghee has the  more stable saturated bonds and so is lot less likely to form the dangerous free radicals when cooking. Ghee's short chain fatty acids are also metabolized very readily by the body. Hmm... So now aren't you confused? Is ghee good or bad you ask with a puzzled look? Be patient, just a bit more.

    Lab studies have shown ghee to reduce cholesterol both in the serum and intestine (aren't you surprised?!). It does it by triggering an increased secretion of biliary lipids (stuff coming out of your bile). Ghee is also good for nerves and brain. It helps control eye pressure and is beneficial to glaucoma patients. I bet you didn't know these, did you?

    Ghee is most notably said to stimulate the secretion of stomach acids to help with digestion, while other fats, such as butter and oils, slow down the digestive process and can sit heavy in the stomach. You don't want that really.

    In addition to ghee's nutritional value, it is rich with antioxidants and acts as an aid in the absorption of vitamins and minerals from other foods, feeding all layers of body tissue and serving to strengthen the immune system. A high concentration of butyric acid, a fatty acid that contains anti-viral properties, is believed to  inhibit the growth of cancerous tumors.

    It is also good for treatment of burns and blisters; a little kitchen remedy there for y'all. According to Ayurveda ghee promotes learning and increased memory retention. Make sure you remember that. And it'll help you remember if you had some ghee!

    However, as a caveat, while in a healthy person consuming ghee may reduce your cholesterol or not affect it, it not advised for people already suffering from high cholesterol.


    So should you eat Ghee or not???
    If you're healthy, ABSOLUTELY. It is safer than butter and has more nutritional use than oil. No you understand how the Punjabi’s have tonnes of ghee and still are fitter and stronger than any other group of Indians? Go get some ghee you weakling.

    A high concentration of butyric acid, a fatty acid that contains anti-viral properties, is believed to inhibit the growth of cancerous tumors.
     

    Although tests and research are still ongoing, it has been used in Indian medicinal practice to help with ulcers, constipation, and the promotion of healthy eyes and skin. An Indian folk-remedy for thousands of years, ghee is also said to promote learning and increased memory retention. It is used in Indian beauty creams to help soften skin, and as a topical for the treatment of burns and blisters.

    Tuesday, 10 January 2012

    நாவல் பழம்



    10 January 2012

    பழங்கள் :
    நீரழிவைக் கட்டுப்படுத்தும் நாவல்பழம்...




                 பழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை  அள்ளித் தருபவை.  நோய்கள் ஏதும்  அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை.

    பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து, உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது.  இந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

    நாவல் பழத்தின் பயன்பாடு ஔவையார் காலத்திலிருந்தே இருந்து வந்திருப்பதை பல புராணக் கதைகள் மூலம் அனைவரும் அறிந்திருப்போம்.

    நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன. 

    ஏரிக் கரைகளிலும், கண்மாய், குளக் கரையிலும் நாவல் மரம் பெரியதாக வளர்ந்திருக்கும்.  தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவற்பழம் பெரியதாகவும், அதிகமாகவும் விளைவிக்கப் படுகிறது.

    நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை.

    நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.  இதில் சிறப்பம்சமாக, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது.

    நாவல் பழத்தின் பயன்கள்

    நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.  மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

    சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

    நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

    அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

    தூக்கமின்றி  அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

    மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். 

    நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும்,  உடல் சூட்டைத் தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

    நாவல் கொட்டை

    நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.  சர்க்கரை நோய் கட்டுப்படும்.   சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு ஆளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம்.  

    நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  நாற்பது வயதை அடைந்தவர்கள் அனைவரும்  நாவல் கொட்டைச்  சூரணம் சாப்பிடுவது நல்லது.

    நாவல் கொட்டையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து டி, காஃபி க்கு பதிலாக அருந்தலாம்.   இன்றும் மலைவாழ் மக்கள் நாவல் கொட்டையை டீ, காஃபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    நாவல் இலை

    நாவல் கொழுந்து இலைச்சாறு     - 1 ஸ்பூன்

    தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி    - 4

    இலவங்கப்பட்டை தூள்    - 1/2 ஸ்பூன்

    இவற்றை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.

    நாவல் பட்டை

    100 ஆண்டுகள் பழமையான நாவல் மரப் பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப் படுகிறது.
    நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.

    எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில்  அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம். 

    Monday, 9 January 2012

    பூண்டு

    பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக‌க்கூட பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, ‌சீனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்ஃபர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

    ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு‌ம், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.

    பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்ஃபரே ஆகு‌ம். மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

    காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு‌ப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

    பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.

    பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். பு‌ற்றுநோயா‌ல் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

    நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்க‌ள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

    நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் தா‌ம்ப‌‌த்ய‌த்‌தி‌ல் ச‌ரியாக ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.