Total Pageviews

Sunday 22 January 2012

திரிசங்கு சுவர்கம்


    
புராணக்கதையும் விஞ்ஞானமும் - திரிசங்கு சுவர்கம்



சூர்ய குலத்து அரசன், திரிபந்தனுடைய குமாரன்
திரிசங்கு இவனுக்கு தன் உடலுடன் ஸ்வர்கம் அடைய
வேண்டி, தன் ஆசாரியர் வசிஷ்டரை அணுகினான் வசிஷ்டர் இது முடியாத காரியமென்று மறுத்துவிட்டார் திரிசங்கு ஆசாரியரின் மீது
கோபம் கொண்டான். இதனால்வசிஷ்டர் திரிசங்குவை
சபித்துவிட்டார். திரிசங்கு விச்வாமித்ர முனிவரை அடைந்து நடந்த
விவரத்தை கூறினான்.

விஸ்வாமித்திரர் தன் தபோபலத்தினால் திரிசங்குவை
உடலுடன் சுவர்கத்திற்கு அனுப்பினார்.சுவர்கத்தில்
தேவர்கள், மானிடன் தேகத்துடன் வருவதை
கண்டு,.அவனை தள்ளிவிட்டனர். திரிசங்கு தலை கீழாக
விழுந்த வண்ணம் விஸ்வாமித்திரரை கூவியழைத்து
காப்பற்றுங்கள் என்று கதறினான்.விசுவாமித்திரர்
திரிசங்குவிற்கு அபயம் தந்து அந்தரத்தில் ஒரு
சுவர்கத்தை ச்ருஷ்டித்து தந்தார். இதுதான் திருசங்கு சுவர்கம் என
அழைக்கப்படுகிறது 

இந்த கதையை விஞ்ஞானபூர்வமாக ஆராய்வோம்.
இதற்கு முன் நாம் வேதகாலத்தில் ( Vedic period)
விண்வெளியில் தூரத்தை அளக்க என்ன அளவுகோள்
உபயோகித்தனர் என்பதை அறியவேண்டும்

1) 10,000,000 = 107 = ஒரு கோடி
2) 100,000 கோடிகள் = 1012 = ஒரு சங்கு.
3) 100,000 சங்கு = 1017 = ஒரு மகா சங்கு
4) 100,000 மகா சங்கு = 1022 = ஒரு விருந்தா
5) 100,000 விருந்தா = 1027 == ஒரு மகா விருந்தா
6) 100,000 மகா விருந்தா = 1032 = ஒரு பத்மா
7) 100,000 பத்மா = 1037 = ஒரு மகா பத்மா
8) 100,000,மகா பத்மா= 1042= ஒரு கார்வா.
9) 100,000 கார்வா = 1047=ஒரு சமுத்ரா
10) 100,000 சமுத்ரா = 1052 = ஒரு மகாசமுத்ரா

வேத காலத்தில் எந்த பெயர் வைத்தாலும் அது ஒரு
காரணத்தை கொண்டுத்தான் இருக்கும்.(காரணப் பெயர்).

வேத காலத்தில் பூமியிலிருந்து மூன்று
சங்கு தூரத்தில் ஒரு நட்ச்த்திர மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மூன்று சங்கு தூரத்தில் இருந்ததால் காரணப் பெயராக அந்த
நட்சதிர மண்டல்த்திற்கு "திரி சங்கு எனப் பெயர்
கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.( திரி என்றால்மூன்று என்று அர்த்தம்)
இந்த கண்டுபிடிப்பைத்தான் திரிசங்கு சுவர்கம் கதை மூலம்
தெரியப்படுத்திருக்கிறார்கள்.

தற்போது க்ரக்ஸ் (Crux) என்று அழைக்கப்படும் நட்சத்திர
கூட்டம்துதான் இந்த திரிசங்கு.

Issues in Vedic Astronomy and Astrology என்ற புத்தகத்தில் 122 ஆம்
பக்கத்தில் chapter "Vedic Astronomy by P.V.Vatakar"  எழுதியுள்ளதிலிருந்து
சில வரிகள்

"The name Trisanku is given to Crux. Trisanku means three "sankus".
"sanku" is a number Three times that number means Trisanku. If we 
calculate taking three sanku mahayojanas we get a figure of 204 light
years. The modernAstronomy tells that the star is nearly 205 Light
years distant from the earth."

No comments:

Post a Comment