சில ஆச்சரியங்கள், சில கேள்விகள்
வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள் (Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.
எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.
ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய "Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.
முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse’s cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். .
இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம்.
மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது.
ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!)
ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம்.
ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம்.
A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.
என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு" இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Observed in this manner, the brain’s overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.
ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.
இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.
இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...
1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?
எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.
What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing.
மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது.
No comments:
Post a Comment