Total Pageviews

Saturday 25 February 2012

நியூட்டனின் ஆப்பிள் மரம்


ஐசக் நியூட்டனின் ஆப்பிள் மரம்

ஹூஸ்டனில் புவி ஈர்ப்பு விசை குறித்து ஐசக் நியூட்டனின் சிந்தனையைத் தூண்டிய ஆப்பிள் மரத்தின் ஒரு பகுதி விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கணிதவியல்-வானியல் அறிஞர் ஐசக் நியூட்டன். புவி ஈர்ப்பு விசை என்று ஒன்று இருப்பது அதுவரை யாருக்குமே தோன்றாத நிலையில், அந்த விசை குறித்து உலகுக்குச் சொன்னவர் நியூட்டன்.

இங்கிலாந்தைச் சேர்ந்த நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது தான் புவி ஈர்ப்பு விசை குறித்த உணர்வு அவருக்கு உண்டானது.

மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் கீழே விழ, அது ஏன் தரையில் விழுகிறது.. என்ற யோசித்தபோது தான் புவி ஈர்ப்பு விசை என்ற ஒன்று அவருக்கு பொறி தட்டியது. அவரது இந்த கண்டுபிடிப்பு இயற்பியல், விண்ணியல் ஆய்வுகளில் மாபெரும் புரட்சிக்கு வழி வகுத்தது.

நியூட்டனுக்கு 'போதனை' தந்த இந்த ஆப்பிள் மரம் லண்டனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இந்த மரத்தின் ஒரு பகுதியை விண்ணுக்குக் கொண்டு சென்று நியூட்டனுக்கு மரியாதை செலுத்த நாஸா முடிவு செய்துள்ளது.

மேலும் நியூட்டன் தலைவராக இருந்த பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி எனப்படும் உலகின் மிகப் பழமையான அறிவியல் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு 350 ஆண்டுகள் முடிவடைவதையொட்டி அந்த அமைப்பை பாராட்டும் விதமாகவும் இந்த மரம் விண்ணுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

2010, 14ம் தேதி வி்ண்வெளிக்குச் செல்லும் அமெரிக்காவின் அட்லான்டிஸ் விண்கலத்தில் இந்த மரத் துண்டை எடுத்துச் சென்றார். விண்வெளி வீரர் பியர்ஸ் செல்லர்ஸ். இவரும் நியூட்டனைப் போலவே இங்கிலாந்தைச் சேர்ந்தவர் தான். 

இது குறித்து பியர்ஸ் கூறுகையில், இந்த மரம் விண்வெளிக்குச் செல்லும் போது அதன் மீது புவிஈர்ப்பு விசையின் தாக்கம் இருக்காது. இதில் ஒரு ஆப்பிள் இருந்திருந்தாலும் அது கீழே விழாது. நியூட்டன் இன்று இருந்திருந்தால் இதை எப்படியெல்லாம் ரசித்திருப்பார். தான் சொன்ன விதி விண்வெளியில் பொய்யாகும் அதிசயத்தை அவர் கண்டு மகிழ்ந்திருப்பார் என்றார்.

No comments:

Post a Comment