Total Pageviews

Thursday 16 February 2012

சாஃப்ட்வேர் இஞ்சினியர்


மாடே மேய்த்திருக்கலாமோ? 
(நான் சாஃப்ட்வேர் இஞ்சினியர் பேசுகிறேன்)


மத்தியானம் கொஞ்சம் சாப்பாடு ஓவரா போனதால லைட்டா தம்மொன்னு போட்டுட்டு வரலாம்னு டைடலுக்கு(TIDEL) வெளியே வந்தேன். நம்மளவிட கொஞ்சம் ஒரு 5+ வயசு கூட இருக்கும்(சாஃப்ட்வேர் இஞ்சினியர் புத்தி போகுதா பாரு. சரியா 5 வருஷம்னாலும் 5+னுதான் போடறது).


என்ன தம்பி எங்க‌ வேல பாக்கிறீங்க?


டைடல் பார்க்
.
"டைடல் பார்க்னா டைட்டா தண்ணியடிச்சுட்டு பார்க்ல ஃப்ளாட்டாயிருதா? ஹா.. ஹா.. ஜஸ்ட் கிட்டிங்" என்றார்.(காட்டுப்பய மாதிரி இருக்கான். என்ன இங்கிலீஷ்லெல்லாம் பேசறான். கொஞ்சம் உஷாரானேன்)


யோவ்!, இப்ப என்னதான் வேணும்? என்றேன் கடுப்பானவனாய்.


எனக்கு ஒண்ணும் வேண்டாம். உனக்கு ஏதாவது வேல வேணும்னா சொல்லு, ஐடியா தர்றேன்.


யோவ், இருந்தாலும் உனக்கு எகத்தாளம் அதிகந்தான். ஆமா நீ என்ன பண்ற?
நான் பக்கத்துல இருக்கற ஃப்லிம் சிட்டில...


ஃப்லிம் சிட்டில...


மாடு மேய்ச்சிகிட்டு இருக்கேன். 


என்னது? மாடு மேய்ச்சிகிட்டு இருக்கிறயா?


ஆமாப்பா, நானும் சாப்ட்வேர் இஞ்சினியராதான் இருந்தேன். நைட் சிஃப்ட், ஆன் கால், ஸ்டேடஸ் மீட்டிங், எஸ்கலேஷன்னு கஷடபட்டுகிட்டு இருந்தேன். இப்போ எந்த தொந்தரவுமில்லை நிம்மதியா போயிட்டிருக்கு லைஃபு என்றார்.
(ஆஹா..அவனா நீ) ஆமா தம்பி நீங்க?


நான் முன்னாடி நல்லாதான் இருந்தேன். இப்பதான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்.


என்ன தம்பி சொல்றீங்க?


"நான் முன்னால மாடு மேய்ச்சிகிட்டு இருந்தேன் ஆனா, இப்ப சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆயிட்டேன்" என்றேன்..


அடடா லேட்டாயிடுச்சே, ப்ராஜெக்ட் மேனேஜர் ஏதோ ரெசிசன் விஷயமா டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னாரே. அவசர அவசரமாக கிளம்பினேன்....
(ஆமா இது மட்டும் ஏன் ஃபிங்க் கலர்ல இருக்கு(pink Slip????))


குறிப்பு 1: இந்த போஸ்ட் சும்மா தமாசுக்காக தமாஸ் பண்ணியது. 


குறிப்பு 2: எங்கள் கம்பெனியில் இதுவரை ஆட்குறைப்பு செய்யவில்லை என்பதை இந்தவார சிறந்த நகைச்சுவை என்று நீங்கள் சொன்னால் நான் கோபப்படுவேன். 


குறிப்பு 3: இந்த போஸ்டை படித்தபின் இதை உண்மையென்று நம்பி வீட்டிலேயே உட்கார்திருக்வோ அல்லது நேரடியாக மாடு மேய்க்கவோ செல்ல‌ வேண்டாம். ஆபிஸ் போய் உங்கள் ஸ்வைப் கார்டு வொர்க் ஆகிறதா என்று கன்ஃபர்ம் செய்து கொண்டு பிறகு முடிவு செய்யவும்.


அன்புடன் நவநீதன்.
(சாஃப்ட்வேர் இஞ்சினியர்,டைடல் பார்க்)

No comments:

Post a Comment