Total Pageviews

Sunday 19 February 2012

தியாகம்


எந்தக் கட்டத்தில் மேற்சொன்னது இன்பமாக இருக்கிறதோ, அக்கட்டத்தில் மனிதனுடைய செயல் அர்ப்பணமாகிறது.அதுவரை மனிதன் அதைத் தியாகம் என நினைக்கிறான்.

விட்டுக் கொடுக்கும் அர்ப்பணம் இன்பம், தியாகமில்லை.

ஆபீஸ் வேலையானாலும், பள்ளிப் படிப்பானாலும், வீட்டு வேலையானாலும், நாம் அதைக் கடனே எனச் செய்கிறோம்.விரும்பிச் செய்வதில்லை.நாம் விரும்பிச் செய்வது பொழுதுபோக்கு, நம் மரியாதை உயரும் காரியங்கள் ஆதாயமானவை.பள்ளியில் முதல் ராங்க் வாங்குபவன், ஆபீசில் சீக்கிரம் பிரமோஷன் பெறுபவர், குடும்பத்தை விரைவாக முன்னேற்றுபவர்களைப் பார்த்தால், படிப்பையும், பைலையும், வீட்டு வேலைகளையும் விரும்பிச் செய்பவர்களாக இருப்பார்கள்.அத்துடன் படிப்பு அவருக்கு இன்பம் தரும்.எல்லோரும் T.V. பார்க்கும்பொழுது அப்படிப்பட்டவர் ஆபீஸ் பைல் பார்த்துக்கொண்டிருப்பார்.ரசமான கதையை நாலுபேர் ருசியாகக் கேட்பதில் பங்கு கொள்ளாமல், அவர்களுக்குரிய சமையலைச் செய்வதில் இன்பம் காண்பவர் ஒருவர்.அனைவருக்கும் சலிப்பான காரியங்களில் இன்பம் தேடுவது சிறந்தவனின் போக்கு. அதைத் தியாகமாகக் கருதும்வரை இன்பமில்லை.இன்பமாகக் கருதினால் தியாகமில்லை.விரதமாக நல்லதை மேற்கொள்ளுதல் பலன் தரும்.ஆனால் அதனால் ஜீவன் மலராது.ஜீவன் மலர வேண்டுமானால், அதை ஜீவன் தானே விரும்பி, ஆர்வமாக ஏற்க வேண்டும்.செயல் அர்ப்பணமாக வேண்டும்.

பிறரிடம் ஓர் உதவியை, பொருளைக் கேட்டு வாங்குபவர் பலருண்டு.அதைக் கேட்காதவருண்டு.கேட்க முடியாதவருண்டு. கேட்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் கூச்சப்படுவதுண்டு,அசிங்கப்படுபவருண்டு.பிறருக்கு ஓர் உதவி தேவை எனில் கொடுப்பதுண்டு, அவர் கேட்டுக் கொடுப்பது, கேட்காமல் கொடுப்பது, கேட்க நினைக்குமுன் கொடுப்பது, கேட்கவேண்டுமென அறியுமுன் கொடுப்பது எனப் பல நிலைகளுண்டு.பிறர் கேட்க அறியுமுன் கொடுப் பதால் அவர் மலர்கிறார்.அவர் மலர்வதால் தான் மலர்பவன் அதில் இன்பம் காண்பான்.அந்த இன்பத்திற்காக மனிதன் செயல்படுவான். அதுவே அவன் கொள்கையானால் அவன் மலர்ந்த நிலையிலிருப்பான். அவன் வாழ்வு சந்தோஷமாக இருக்கும்.அவன் விட்டுக் கொடுப்பது தியாகமாகாது.தியாகம் என நினைக்கவும் தோன்றாது.

இது உலகத்திற்குப் புதிதன்று.அரிது.பிறருக்கு நாம் உபதேசமாகச் செய்வதன்று.நாமே பின்பற்றுவது.நம் வளர்ச்சி,மலர்ச்சியாகப்பின்பற்றுவதாகும்.பள்ளியிலிருந்து வரும் குழந்தைக்கு இருக்கும் ஒரே இனிப்பைத் தாம் சாப்பிடாமல், கொடுப்பதைத் தாயார் தியாகம் என நினைப்பதில்லை.குழந்தை தாயார் தியாகம் செய்வதாக அறிவதில்லை.அதைச் சாப்பிடுவது குழந்தைக்கு இன்பம். குழந்தையின் இன்பத்தில் தாயார் காண்பதின்பம்.


நான்கு நண்பர்கள்.ஒருவன் சுயநலமி.அடுத்தவன் மடசாம்பிராணி.ஒருவன் அதிகப்பிரசங்கி.பிறரை மட்டம் தட்டி பேசுபவன்.பிறர் இனிக்கப் பழகும் குடும்பத்தில் பிறந்தவன் ஒருவன். 


ஊரிலிருந்து அதிகப்பிரசங்கி வெளியூர் ஹாஸ்டலில் தங்கிப்
படித்தான்.லீவுக்குவந்திருந்தான்.மடசாம்பிராணியும் மற்றவனும் பேசிக் கொண்டிருந்ததைப்
பார்த்தான்.வந்தவுடன் தன் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.கேட்பவனும் வேறோர் ஊரில் ஹாஸ்டலில் வாழ்பவன், அவனுக்கும் சொல்ல விஷயமிருக்கும் என்று
அதிகப்பிரசங்கிக்குத் தோன்றவில்லை.மாலை 3 மணியிலிருந்து 5 ½ வரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான்.அதிகப்பிரசங்கி சென்னையில் கல்லூரியில் படிப்பவன்.5 1/2 மணிக்கு வந்தான். இரண்டு நிமிஷத்திற்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை, "டேய், என்னடா நினைத்திருக்கிறே.நீ பாட்டுக்கு பேசறே.நானும் ஹாஸ்டல்ருந்து வர்ரேன்.இவனும் ஹாஸ்டலில்தான் படிக்கிறான். போதும் உன் கதையை நிறுத்து.இவன் மடையன்.அடுத்தவன் வாயில்லாப்பூச்சி.அவர்கள் வேண்டுமானாலும் கேட்கலாம்.நான் கேட்கமாட்டேன்'' என்றான்.2 1/2  நிமிஷம் ஒருவருக்குத் தாங்காததை கேட்ட மற்ற இருவரும் இனிமையான சுபாவமுடையவர்களாக இருந்திக்க வேண்டும் அல்லவா?...

No comments:

Post a Comment