Total Pageviews

Thursday, 16 February 2012

குற்றவுணர்ச்சி



சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் நாம செய்யற காரியத்துல ஒருத்தவங்க தப்பு கண்டுபிடிச்சி குறை சொல்றது. இது எப்பொழுதிலிருந்து எனக்கு பிடிக்காம போச்சுனு ஞாபகமில்லை. ஒரு வேளை எங்க அம்மாவை எப்பவுமே குறை சொல்லிட்டேஇருக்குற எங்க அத்தைதான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். காலேஜ்ல எங்க கூட படிச்ச கார்த்தி அப்படி தான், யார் எதுபண்ணாலும் ஏதாவது தப்பு கண்டுபிடிச்சி சொல்லிட்டே இருப்பான். அந்த காரணத்துக்காகவே என் எதிரி லிஸ்ட்ல அவன் நம்பர் ஒன்
நான் உஷார் பண்ண குஜிலீஸ ட்ரை பண்ற சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க.


எதுக்குடா இப்படி இவன் வரலாறு எல்லாம் சொல்லிட்டு இருக்கானேனு யோசிக்கறீங்களாஇப்படி எனக்கு சுத்தமா பிடிக்காத ஒருவிஷயமே என் வாழ்க்கையாகி போகும்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலைஎன்ன சொல்றனு புரியலையாபடிக்க ஒரு பிரிவு,வேலைக்கு ஒரு பிரிவுனு கஷ்டப்படும் இஞ்சினியர்களில் நானும் ஒருவன்படிச்சது எலக்ட்ரானிக்ஸ்வேலை கிடைச்சது சாப்ட்வேர்ஃபீல்ட்அதுவும் ஒரு பெரிய இந்தியன் கம்பெனிமூணு மாசம் ட்ரெயினிங்அட்டகாசமா இருந்துச்சு.

ட்ரெயினிங் முடிச்சி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு டொமைன்ல போட்டாங்கஎனக்கு மட்டும் என் வாழ்க்கைலயே வெறுக்கற ஒருவேலைல போட்டாங்கஅது தான் டெஸ்டிங்எவனோ டெவலப் பண்ற ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதானு பார்த்துட்டுஅதுல இருக்குற தவறை (பக்) எல்லாம் கண்டுபிடிக்கனும்அப்படி கண்டுபிடிக்கிற தவறு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னுபார்த்து எதுக்கு ஏத்த மாதிரி Severity, Priority எல்லாம் போட்டு டெவலப்பர்ஸ்க்கு அனுப்பனும்.

அவுங்களும் எடுத்தவுடனே அதை ஒத்துக்க மாட்டாங்கஅதுக்கு அப்பறம் அவனோட பங்காளி சண்டை போடணும்ஏதோ மாமியார்,மருமக சண்டை மாதிரி இருக்கும்எனக்கு வேலை செய்யுதுநீ சரியா பண்ணலனு அவன் சொல்லுவான்அப்பறம் நாம அவனுக்கு அதை விளக்கனும்நீ டெவலப் பண்ண அப்ளிக்கஷன்ல தப்பு இருக்குடானு சொல்றது ஏதோ திருவிளையாடல் படத்துல நக்கீரன் சொல்ற மாதிரி இருக்கும்அவன் நம்மல பார்க்கும் போதுகுற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் ரேஞ்சுக்கு பார்ப்பான்சிலசமயம் நம்மல பத்தி சொல்லும் போது பூச்சி பிடிக்கறவனு சொல்லுவாங்க.

சில சமயம் கம்பெனி மாறி டெக்னாலஜி மாறிடலாம்னு தோணும்ஆனா இன்னைக்கு இந்தியாவுல அதிக பிராஜக்ட்ஸ் டெஸ்டிங்ல தான்இருக்குதுஅப்பறம் இதுல இருந்தா சீக்கிரம் ப்ரோமோஷன் கிடைக்கும்டொமைன்ல எக்ஸ்பர்ட் ஆகலாம்னு என் மேனஜர் திரும்பதிரும்ப சொல்லி என்னை இதுலயே இருக்க வெச்சிட்டார்சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசுரொம்ப கஷ்டமா இருக்கும்இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.

இப்படி தான் சிவாஜிக்கு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் புக் பண்ணிட்டு கிளம்பற நேரம் பார்த்து ஒருத்தவன் வர முடியலைனு சொல்லிட்டான்.வெள்ளிக்கிழமை அதுவுமா அவன் டெஸ்டிங் டீம்ல நிறைய பக் ரைஸ் பண்ணிட்டாங்க அதனால மொத்த டீமும் சனிக்கிழமை வரவேண்டியதா போச்சுனு சொல்லிஅந்த பக் ரைஸ் பண்ணவன் ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்குஅவனுக்கு வேற வேலை வந்து ஃபர்ஸ்ட் நைட்டே கேன்சலாகனும்னு திட்டினான்
இந்த மாதிரி எவன் எவன் நமக்கு என்ன சாபம் விடப்போறானோனு இருந்தது. அவன்கிட்டஏன்டா மச்சான் இப்படி பர்சனலா திட்றனு கேட்க முடியாது. தப்பு உன் மேல தானனு சொல்லவும் முடியாது. சொன்னா, பார்டா டெஸ்டர்வந்துட்டாருனு நம்மயே கலாய்ப்பானுங்க.
இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன்ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதாலஇருக்கலாம்ஆனா எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.
வெளிய சொல்லும் போதும் டெஸ்டர்னு சொல்றதுக்கு எனக்கு கூச்சமா தான் இருக்கும்வெறும் சாப்ட்வேர் இஞ்சினியர்னு தான்சொல்லுவேன்அப்பறமும் ஜாவாவாடாட் நெட்டானு யாராவது கேட்டாவேற வழியில்லாம டெஸ்டிங்ல இருக்கேனு சொல்லும்போது ஏதோ செய்யக்கூடாத வேலை செய்யற மாதிரி இருக்கும்.
சாப்ட்வேர் லைஃப் சைக்கிள், water flow model, V Modelனு எல்லாம் டெஸ்டிங்ல சேர்ந்த புதுசுலயே சொல்லி கொடுத்து என் குற்றவுணர்ச்சியை போக்க பார்த்தாங்கஒரு Bugயை ஒரு பிராஜக்ட் ஆரம்ப கட்டத்துல கண்டுபிடிக்கறதுக்கும்அதை நடைமுறைபடுத்துன பிறகு கண்டுபிடிக்கறதுக்கு ஆகுற செலவுக்கு எனக்கு வித்தியாசம் தெரியாம இல்லஇருந்தாலும் இவ்வளவு பெரியசாஃப்ட்வேர் லைஃப் சைக்கிள்ல நான் ஏன் இப்படி டெஸ்டிங்ல வந்து மாட்டனும்னு ஒரு கஷ்டம்அந்த கஷ்டத்தைவிட பெரிய கஷ்டம்இந்த டெவலப்பர்ஸ் கூட சண்டை போடறது தான்என்னுமோ எல்லாத்தையும் சரியா பண்ண மாதிரி பேசுவானுங்கஒரு மண்ணும்ஒர்க் ஆகாதுஆனா பேசும் போது மட்டும் என்னுமோ பெரிய லார்டு லபக்கு தாஸ் மாதிரி பேசுவானுங்கஒரு அப்ளிகேஷன் டெவலப்பண்ணவுடனே அது கொஞ்சமாவது வேலை செய்யுதானு பார்க்கனும்அதை கூட பண்ண மாட்டானுங்க.
போன வாரம் இப்படி தான் ஒரு அப்ளிகேஷன்ல பிறந்த நாள் தேதி இருந்ததுஅதுல நான் பாலாஜினு டைப் பண்ணாஅதையும் எந்ததப்பும் சொல்லாம ஏத்துக்குதுகேட்டா பிறந்த நாள் இடத்துல தேதியை கொடுக்காம நீ உன் பேரை போட்டா அது யார் தப்புஉன்னைமாதிரி ஆளுங்களா இதை பயன்படுத்த போறாங்கஇதை பயன்படுத்தறவங்களுக்கு எல்லாம் புத்தி இருக்கும்னு
சொல்லிசிரிக்கறானுங்க

அந்த கடுப்புல போன வாரம் மட்டும் எங்க டீம் 200 டிஃபக்ட் ரைஸ் பண்ணிருக்கோம்இந்த வாரம் எப்படியும் 100ஆவதுரைஸ் பண்ணனும் டார்கெட் வெச்சிருக்கோம்அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.
இருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும்கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லணும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையும்.

No comments:

Post a Comment