Total Pageviews

Saturday, 18 February 2012

மதிப்பெண் பந்தயம்-கொலைவெறி

மதிப்பெண் பந்தயம்-கொலைவெறி
மாணவர்கள் - 
மதிப்பெண் பந்தயத்தில்
எல்லோரும் ஜெயிக்க
முடியாது என்பதை
தெரிந்தே தோற்றுப் போகும்
இரண்டு கால் குதிரைகள்


       "தாரே ஜமீன்பர்" (Tare jameen par - Hindhi)  அமீர்கானின் இயக்கத்தில் எழுத்து மற்றும் எண்களை புரிந்துகொள்வதில் குறைபாடுடைய ஒரு சிறுவனை பற்றிய அழகிய பதிவு. அதில் ஒரு காட்சியில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் படிப்பு விஷயத்தில் நடந்து கொள்ளும் முறையை சாடும் விதமாக ஒரு வசனம் அமைத்திருப்பார் 
    
  " குழந்தைகள் எல்லாவற்றிலும் முதலாவதாக வர வேண்டும் எதை எடுத்தாலும் நெ.1 ஆக  வரவேண்டும் அதற்கு பேசாமல் இரண்டு குதிரைகளை வாங்கி ரேஸ் (பந்தயம்) நடத்த வேண்டியது தானே எதற்கு குடும்பம் நடத்த வேண்டும்" - 

என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருப்பார், இந்த கோபம் நிச்சயம் நியாயமானதுதான், நம்மால் சாதிக்க முடியாதையெல்லாம், நமது குழந்தைகள் சாதிக்க வேண்டும் என எதிர்பார்பது சரிதான், ஆனால் அதற்காக குழந்தைகளை அவர்களது சிறுபிள்ளைதனத்தை, ஓடியாடி விளையாடும் பருவத்தை அடக்கி நசுக்கி நமது இயலாமையை அவர்கள் மீது திணித்து ஒரு இயந்திர வாழ்க்கைக்கு தயார் படுத்துவது எந்த விதத்தில் சரியாகும்?
இதனால் பிஞ்சுக்குழந்தைகளின் உள்ளத்தில் நஞ்சை விதைத்து கொலைவெறியை அறுவடை செய்து வருகிறோம். எங்கே போனது மழலை பேச்சுக்கள், கொஞ்சல்கள், யாரை பார்த்தாலும் முறைப்பு பார்வை, கனிவற்ற பேச்சுக்கள், அறியாத பையன், அறியாத பொண்ணு எனபார்களே அவர்கள் எங்கே போனார்கள். திருடர்களை, ரௌடிகளை, பயங்கரவாதிகளை தேடுவதுதானே போலிஸின் வேலை. ஆனால் ஏன் இப்பொழுது மாணவர்களை தேடுகின்றனர்.  

இன்றைய குழந்தைகளின், மாணவர்களின் நிலை என்ன தெரியுமா? அவர்களது இயல்பை மறக்கடித்து காலையிலிருந்து இரவு வரை வெறும் புத்தகங்களின் பின்னே ஒடவிட்டுக்கொண்டிருக்கிறோம், அவர்களிடம் மனம் விட்டு பேச ஆட்களில்லை, தந்தை தொழிலில் மூழ்கிவிட்டார், தாய் தொலைகாட்சியில் தொலைந்து விட்டார், பாவம் குழந்தை என்ன செய்யும் துரித உணவோடும், கம்பியுட்டர் கேம்ஸ்சோடும் தனது உலகத்தை சுருக்கிக் கொள்கிறது, விளைவு அளவுக்கதிகமான உடல் வளர்ச்சி, மன அழுத்தம், வன்முறை உணர்வு என பலவித பாதிப்புக்குள்ளாக்குகிறோம், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் அவர்கள் பருவம் அடையும் முன்னதாகவே பலவிதமான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், இன்னொரு புறம் சின்னத்திரையும், வெள்ளித்திரையும் போட்டி போட்டுக் கொண்டு கலாச்சார சீரழிவினை மேற்கொண்டு வருகிறார்கள், படிக்கும் பருவத்தில் மாணவர்களை வன்முறையாளர்களாகவும், போதைப் பழக்கங்களுக்கு அடிமைகளாகவும், காதல் என்ற பெயரில் தவறான பாலியல் உறவுகளுக்கு தூண்டுகோலாக இருப்பதில் சினிமாவும் தொலைக்காட்சியும் இன்டர்நெட்டும் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதனை யாரும் மறுக்க இயலாது.  இப்படி மாணவர்களின் இயல்பையும் மனோநிலையும் சீர்குலைகும் எல்லா சங்கதிகளையும் அவர்களை எளிதாக அடைய வழி செய்துவிட்டு, மதிப்பெண் பந்தயத்திலும் முதலிடம் பெறச்சொன்னால் அது எந்த வகையில் நியாயம். 

சரி! இதற்கெல்லாம் என்ன தீர்வு? இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவை நல்லொழுக்கப் பயிற்சியும், அன்பும் பாசமும் கலந்த தன்னம்பிக்கையூட்டலும்தான். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டிய தருணம் இது, மற்றும் இளைஞர்களான நம் மீதும் இந்த சமூகப்பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது, சமூகச்சீர்கேட்டினை தடுப்பதில் நம்மால் ஆன முயற்சிகளை முன்னெடுப்போமாக!!!!


அன்புடன்
உங்கள்

ஏழாவது அறிவு

No comments:

Post a Comment