விஷயமில்லாத அதிகாரத்தை வற்புறுத்துவது எதிர்காலத்தில் தோல்விக்கு வித்தாகும்.
பெற்றோருக்குப் பிள்ளைகள் மீதும், முதலாளிக்குத் தொழிலாளி மீதும், அதிகாரிக்குச் சிப்பந்தி மீதும், பாங்க்குக் கடன் பெற்றவர் மீதும் அதிகாரம், உரிமையுண்டு. அவற்றை எல்லா இடங்களிலும் எல்லா அளவுகளிலும் செலுத்த முடியாது. செலுத்த முயலாமலிருப்பவர் குறைவு. செலுத்துபவருக்கு எதிர்காலத் தோல்வி நிச்சயம்.
ஹாஸ்டலுக்குப் போகும் பையனைப் படிக்கச் சொல்லி புத்திமதி சொல்லலாம். தினமும் 3 மணி படிக்க வற்புறுத்தலாம். எப்படி அதை நிறைவேற்ற முடியும்? நிறைவேற்ற முடியாத ஓர் உரிமையை அளவு கடந்து வற்புறுத்தினால் பையன் பொய் சொல்ல ஆரம்பிப்பான். அதனால் பிள்ளைக்கு வெறுப்பு வரும். தகப்பனாருக்கு எதுவும் புரியவில்லை என்பது, அவனுக்குப் புரிந்து விடும்.
சர்க்கார் தொழில் அதிபர்களை உண்மையான கணக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம். வற்புறுத்தினால் எப்படி அதை நிறைவேற்றுவது? நடைமுறையில் கோடிக்கணக்காக இலாபம் சம்பாதித்து ஆயிரக்கணக்காக வரி கட்டுபவர் தப்பித்துக் கொள்வார்கள். இலட்சக்கணக்கில் வியாபாரம் செய்து ஆயிரக்கணக்காகச் சம்பாதிப்பவன் வருமானவரி ஆபீஸுக்கு ஆயிரம் நடை நடக்க வேண்டியிருக்கும்
இல்லாத அதிகாரத்தைச் செலுத்த முயன்றால் இருக்கும் வசதியும் போய்விடும்.
No comments:
Post a Comment