Total Pageviews

Sunday, 19 February 2012

மதிப்பெண் பெற அல்ல


பெண்ணே மதிப்பெண் பெற அல்ல மார்பகங்கள்

பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து!

முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை அழகுப் பெண்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த க்ளீவேஜ் அளவுக்கு மிஞ்சிப் போனால் அது அவர்களுக்கு ஆபத்தாகி விடும். அவர்களை மற்றவர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார் மார்பக குணாதிசயங்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவரான அமெரிக்காவின் எலிசபெத் ஸ்கொயர்ஸ்.

குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், அதீத க்ளீவேஜுடன் போனால், சக ஊழியர்களே அவர்களை வெறுப்பார்களாம். அவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து கூட அதிகமாம்.

இதுகுறித்து அமெரிக்க டிவி ஒன்றுக்கு ஸ்கொயர்ஸ் அளித்த பேட்டியில், பெண்களின் மார்பகங்கள் பெருகப் பெருக, அவர்கள் அணியும் உடைகள் குறுகிக் கொண்டு போகின்றன. தங்களை இன்னும் எடுப்பாக காட்ட வேண்டும் என்பதற்காக அதீத க்ளீவேஜ் காட்டும் உடைகளை பெண்கள் அணிய விரும்புகின்றனர்.

ஐரோப்பிய அலுவலகங்களில் அதீத க்ளீவேஜுடன் கூடிய உடைகளை அணியும் பெண்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன்களை விட பாதகமே அதிகம்.

இப்படி மார்பகங்களை அதிக அளவில் வெளியில் தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு வேலை செய்யும் பெண்களால், அலுவலகத்தில் பல குழப்பங்கள் ஏற்படும். இது அவர்களின் வேலைக்கும் கூட உலை வைக்கும் என்றார் ஸ்கொயர்ஸ்.

இதுதொடர்பாக ஸ்கொயர்ஸ் ஒரு ஆய்வையும் மேற்கொண்டார். அதில் க்ளீவேஜ் குறைவாக உள்ள, அதிகம் உள்ள மற்றும் அதிக ஆபாசம் இல்லாத அழகிய உடைகள் அணிந்த பெண்கள் என விதம் விதமான பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் காட்டி கருத்தறியப்பட்டது.

மேலும் பல்வேறு அளவுகளிலான பிராக்கள் குறித்தும் ஆண்களின் கருத்தறியப்பட்டது.

அப்போது பெரும்பாலான ஆண்கள் மற்றும் பணியாற்றும் ஆண்கள், நடுத்தர மார்பகங்களை உடைய, க்ளீவேஜ் அதிகம் காட்டாத பெண்களை மட்டுமே தங்களுக்குப் பிடித்தவர்களாக தேர்வு செய்தனராம்.
ஸ்கொயர்ஸ் தொடர்ந்து கூறுகையில், முன்னழகைக் காட்ட லேசான க்ளீவேஜ் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அது அழகாகவும் இருக்கும். அதற்கேற்ற உடல் வாகு இருந்தால் அதை ஏற்கலாம். அதேசமயம், பெரும்பாலான பாகம் வெளியில் தெரியும்படியான அல்லது நம்மால் மற்றவர்களின் கவனம் சிதறும் அளவிலான டிரஸ்ஸிங் நமக்கே வேட்டு வைத்து விடும்.

நமது மார்பகங்களைப் பார்த்து மற்றவர்கள் நம்மைப் பற்றி மதிப்பிட பெண்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment