Total Pageviews

Thursday, 9 February 2012

பொன் மொழிகள்



கீதோபதேசம் செய்கிறார் கண்ணன்

*மனிதனை அழிக்கும் நரக வாசல்கள் மூன்று. அவை காமம், கோபம், பேராசை ஆகியவை. ஆதலால் இம்மூன்றையும் விலக்க வேண்டும். 
* மனித உடல் மிகவும் மகத்தானது. கிடைத்தற்கரியது. பலபிறவிகளில் செய்த நற்பலன்களால் தான் இம்மனிதப்பிறவியைப் பெறமுடியும். இதனைக் கொண்டு ஒவ்வொருவரும் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற முயலவேண்டும்.

* ஆசைகளைத் துறந்து நான், எனது என்னும் ஆணவ எண்ணங்களை அடியோடு அகற்றி தூய்மை பெற்றவன் உள்ளத்தில் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருக்கும். 
*புலன்களுக்கு அடிமையான மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடைவான்.
* மிகச்சிறிய உயிரினம் கூட தன்னைக்காத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கிறது. ஆறறிவு பெற்ற மனிதன் தனக்கு எது நன்மை பயக்கும் என்பதை தானே யூகித்து அறிய முடியும். 
* இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் மனிதனால் மட்டுமே ஆன்மிக சாதனைகளைப் பின்பற்றி இறைவனை உணர முடியும்.

* எல்லா உயிரினங்களுக்கும் நன்மை செய்வதே மனிதப்பிறவியின் நோக்கமாகும்கவர்ச்சி பேச்சில் ஏமாறாதீர்
* உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என கருதுகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.
* மனம் சலிக்காமல் இறைநெறியில் ஆழ்ந்து வருபவனுக்கு செல்வம் சேரும். புத்திரர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட அணுகாத நிலை ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகூடும்.
* பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.

-தாயுமானவர்

வேண்டுகோள் விடுக்கிறார் வேதாத்ரி மகரிஷி

*நோயற்ற உடலை உடையவர்கள் தான் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். அவர்களுக்கு அறிவும் திறம்பட இயங்கும். ஆன்மிக உயர்வுபெற்று இயற்கை இன்பங்களையும் அனுபவிக்க முடியும். எனவே, ஒவ்வொருவரும் நோயற்று வாழ வழிவகைகளைத் தேடிக் கொள்ள வேண்டும்.
* நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தின் ஒரு அங்கம். சமுதாயத்திடம் இருந்து பெற்ற வாய்ப்பு வசதி மூலமாகத் தான் நாம் இந்த உடலையும், அறிவையும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். எனவே, நம்முடைய உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.
* உடலில் இருக்கும் நோய்களைப் போக்கிக் கொள்வதை சிகிச்சை என்கிறோம். அதைவிடச் சிறந்தது, நோய் வராமலேயே தடுத்துக் கொள்வதாகும். 
* எந்த விதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்குரிய ஆற்றல் ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே அமைந்துள்ளது. திடமனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய் இல்லாமல் உடல்நலத்துடன் வாழ அவசியமானவை. பேராசை, கோபம், கடும்பற்று, முறையற்ற எண்ணங்கள், கவலை, பொறாமை போன்றவை உடலின் காந்த சக்தியை அழித்து விடுபவை. இந்த கீழான உணர்ச்சிகளை தவத்தால் மட்டுமே மாற்ற முடியும்.
மனம் நோகப் பேசக்கூடாது


* உண்மையை மறக்காமல் எப்போதும் பொய்யை விலக்கி விட்டு வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். பிறருக்கு இதமானவற்றைச் செய்யுங்கள். இவ்வகையில் உண்மையை உரைத்தல் எப்போதும் கடினம் தான்.
* உணவு வகைகளை மிதமிஞ்சி உண்ணும் பழக்கம்கூடாது. அது மிகமிகத் தீமையைப் பயக்கும். உணவுப்பொருள்களை தேவையோடு அளவாகத் தான் எடுத்துக் கொள்வது நல்லது.
 * ஊமையை ஊமை என்று சொல்வதும், நோயுற்றவனை நோயாளி என்றும் சொல்வது உண்மையாயினும் இவ்வாறெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் நோகும்.
* தானம் நான்கு வகையாகும். அவை, உணவு, மருந்து,சாஸ்திரம், அபயம் என்பனவாகும். இந்த நான்கு வகை தானங்களும் அவசியம் செய்ய வேண்டியவை ஆகும்.
* மன்னிப்பு கேட்பதன் மூலம் அன்பு செய்யும் குணம் உண்டாகும். அக்குணத்தின் மூலம் அச்சம் அகன்று விடும். தூய்மை நெஞ்சில் பிறக்கும்.
 * புறத்தூய்மையை விட அகத்தூய்மையே மிகவும் சிறந்தது. புறத்தூய்மை வேண்டும் என்பதற்காக வாசனைத்தைலம் இட்டு நீராடுகின்ற மனமே கூடாது.

-மகாவீரர்


         

No comments:

Post a Comment